/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
/
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : ஜன 03, 2026 05:33 AM

அவனியாபுரம்: மதுரை அவனியா புரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதி, மருத்துவ பரிசோதனை துவங்கியது.
ஜன.,15ல் அவனியாபுரம், ஜன.,16 பாலமேடு, ஜன.,17 அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.
அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் பாபு ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினார். காளைகள் நாட்டு இனமாக இருத்தல் வேண்டும். காளைகளுக்கு 4 பற்கள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 120 செ.மீ., மீட்டர் உயரத்துடன் இருக்க வேண்டும். 2 முதல் 8 வயது இருக்க வேண்டும்.
காணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். திமில் இருக்க வேண்டும். உடலில் காயங்கள் இருக்கக்கூடாது. நோயுற்ற காளைகள், உடல் மெலிந்த காளைகளுக்கு தகுதி இல்லை. கொம்புகள் கூர்மையாக இருக்கக்கூடாது. தெளிவான கண் பார்வை உள்ளிட்ட விதிகளை தகுதியாகக் கொண்டு பரிசோதனை நடந்தது.
காளைகள், அதன் உரிமையாளரின் போட்டோ, போட்டிக்கு அழைத்து வருபவர், உரிமையாளர் ஆதார் அட்டை நகலை சமர்ப்பித்த பின்பு காளைகளுக்கான உடல் தகுதி சான்று வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் போட்டியில் பங்கேற்க அனுமதி சீட்டு வழங்கப்படும்.
பாலமேடு பாலமேட்டில் டாக்டர் தங்கபாண்டியன் தலைமையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஹரிகிருஷ்ணன், பணியாளர்கள் காளைகளை பரிசோதித்து தகுதி சான்றிதழ் வழங்கினர்.

