/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு விழாக்களுக்கு தனியார் பள்ளி பஸ்களை 'ஓசி' கேட்பதால் அதிருப்தி
/
அரசு விழாக்களுக்கு தனியார் பள்ளி பஸ்களை 'ஓசி' கேட்பதால் அதிருப்தி
அரசு விழாக்களுக்கு தனியார் பள்ளி பஸ்களை 'ஓசி' கேட்பதால் அதிருப்தி
அரசு விழாக்களுக்கு தனியார் பள்ளி பஸ்களை 'ஓசி' கேட்பதால் அதிருப்தி
ADDED : நவ 22, 2025 04:28 AM
மதுரை: மதுரையில் அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தனியார் பள்ளிகளின் பஸ்களை பயன்படுத்த அதிகாரிகள் உத்தரவிடுவதால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மதுரையில் முதல்வர், அமைச்சர்கள், அரசு நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டிய சூழல் இருந்தால் அவர்களை அழைத்துவர கல்வித்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அவர்களை விழாக்கள் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் பள்ளிகளுக்கே அழைத்துவர பெரும்பாலும் தனியார் பள்ளிகளிடம் பஸ்களை 'ஓசி' வாங்குவது தொடர்கதையாகிறது. இதனால் தனியார் பள்ளிகள் அன்றைய நாளில் விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.
தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: மதுரையில் இன்று துவங்கும் ஒரு உணவு திருவிழாவுக்கு கூட மாணவர்களை அழைத்துச் செல்ல குறிப்பிட்ட பள்ளிகளின் பஸ்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். டிச.,3 வரை நடக்கும் இதில் பங்கேற்க, அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தனியார் பள்ளிகளிடம் பஸ்கள் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது வினோதமாக உள்ளது. தராவிடில் நிர்வாக ரீதியாக பிரச்னைகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் உள்ளது. டிச.7ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் அரசு மாணவர்களை அழைத்துச் செல்ல தனியார் பள்ளி, கல்லுாரிகளின் பஸ்களை கேட்டுள்ளனர்.
2 ஆண்டாக ஆர்.டி.இ., சேர்க்கைக்கான பணம் வராததால் நிதிநெருக்கடியில் சிக்கி தனியார் பள்ளிகள் தவிக்கும் நிலையில் இதுபோன்ற அரசு விழாக்களுக்கும் பஸ்களை இலவசமாக கேட்கின்றனர். பராமரிப்பு, எரிபொருள் செலவு என கூடுதல் செலவை சந்திக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோல் 'ஓசி' கேட்கும் நடைமுறையை கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என்றனர்.

