/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெடுஞ்சாலைத்துறையில் 15 ஆண்டுகளாக அமல்படுத்தாத அரசாணையால் அதிருப்தி
/
நெடுஞ்சாலைத்துறையில் 15 ஆண்டுகளாக அமல்படுத்தாத அரசாணையால் அதிருப்தி
நெடுஞ்சாலைத்துறையில் 15 ஆண்டுகளாக அமல்படுத்தாத அரசாணையால் அதிருப்தி
நெடுஞ்சாலைத்துறையில் 15 ஆண்டுகளாக அமல்படுத்தாத அரசாணையால் அதிருப்தி
ADDED : ஆக 17, 2025 10:53 PM
மதுரை : நெடுஞ்சாலைத் துறையில் 15 ஆண்டுகளாக அரசாணையை அமல்படுத்தாமல் தாமதம் செய்வதால் தொழில்நுட்ப சாலை ஆய்வாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் தொழில்நுட்ப பணியாளர்களாக சாலை ஆய்வாளர்கள் உள்ளனர். பத்தாம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெற்ற இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதேபோல கீழ்நிலையில் உள்ள மஸ்துார் பணியாளர்களும் (சாலைப் பணியாளர்) பதவி உயர்வு மூலமும் இப்பணியாளர்களாக வருகின்றனர்.
அரசாணை கூறுவதென்ன இருதரப்பினரில் பத்தாம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., சான்றிதழுடன் வருவோர் கூடுதலாக தொழில்நுட்ப பணியாளர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கான தரச்சம்பளம் தொழில்நுட்ப பணியாளர் எனப்படும் நேரடியாக தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு லெவல் கூடுதலாக வழங்க வேண்டும் என அரசாணையில் (எண்:338/26.8.2010) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணைப்படி பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, ஊரக, நகராட்சி, மாநகராட்சி என உள்ளாட்சி துறைகளில் எல்லாம் உடனே அமல்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் இதுவரை இந்த அரசாணயை அமல்படுத்தாமல் உள்ளனர்.
இதனால் நேரடியாக தேர்வு பெற்றோருக்கும், பதவி உயர்வு மூலம் வந்தவர்களுக்கும் தரச்சம்பளத்தில் ஒரே சம்பள விகிதம் பின்பற்றப்படுகிறது. இதனால் தங்களுக்கான சம்பளம் உட்பட சலுகைகள் பாதிப்பதாக தொழில்நுட்பட சாலைப் பணியாளர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
கிடப்பில் போட்டுள்ளனர் நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப சாலை ஆய்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் திருமுருகன், சுரேஷ், செல்வராஜன், சரவணகுமார், இசக்கிராஜ் ஆகியோர் கூறுகையில், ''அரசாணைப் பிறப்பித்து பதினைந்து ஆண்டுகளாக அமல்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறை மட்டும் கிடப்பில் போட்டுள்ளது. இதற்காக பலமுறை மனுகொடுத்து போராடியும் தீர்வுகாண முடியவில்லை.
நேரடியாக பணிக்கு வந்த பணியாளர்கள் தொழில்நுட்ப சான்றிதழ் பெற்றவர்கள். இதனால் இருவருக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி அரசாணை ஆறாவது ஊதியக்குழுவில் வெளியிடப்பட்டது.
சில மாதங்களில் 8 வது ஊதியக்குழு வர உள்ளநிலையில் கடந்தகால ஊதியக்குழு பரிந்துரை நிலுவையில் உள்ளது சரியானதல்ல'' என்றனர்.