ADDED : அக் 19, 2025 10:19 PM
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளர்களுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினர். அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் வெடி, இனிப்புகளும், அறங்காவலர் மணிச் செல்வம் இனிப்பு, சில்வர் பாத்திரம் வழங்கினர்.
மாநகராட்சி மேற்கு மண்டல துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார். தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள், 98 வார்டு கட்சி நிர்வாகிகளுக்கு புத்தாடையை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் வழங்கினார்.
திருப்பரங்குன்றம், திருநகர், விளாச்சேரி, மதுரை பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர், 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளிக்கான புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருநகரில் கவுன்சிலர் இந்திரா காந்தி 95வது வார்டு துாய்மை பணியாளர், கட்சியினருக்கு புத்தாடை வழங்கினார்.
அ.தி.மு.க.வின் ஜெ. பேரவை மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், இளைஞரணி துணைச் செயலாளர் வேல்ராஜ் சார்பில் 700க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை, இனிப்பு வழங்கினர். கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஹர்விபட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிச் செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் பாலா, செல்வகுமார் பங்கேற்றனர்.