UPDATED : நவ 09, 2026 12:47 AM
ADDED : நவ 09, 2026 12:44 AM

அ நிறம் | அளவு
மதுரை: சாமிநாத் பாபு நினைவு மாவட்ட கேரம் போட்டி மதுரை கே.எல்.என்., வித்யாலயா பள்ளியில் நடந்தது. ஜெ.சி.ஐ., மதுரை பாண்டியன் ஏற்பாடு செய்தது. சவுராஷ்டிரா பாலிடெக்னிக் கவுன்சில் பொருளாளர் பன்சிதர், நிர்வாகிகள் தினேஷ்குமார், கேரம் சங்கத் தலைவர் ஜெய்குமார், செயலாளர் அசோக்குமார் பங்கேற்றனர்.
போட்டி முடிவுகள்: ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் யூத் கேரம் கிளப் ஆரோக்கியராஜ், பிராங்க்ளின், மித்ரா முதலிடம் பெற்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஒற்றையர் பிரிவில் மித்ரன், டி.வி.எஸ். பள்ளி கிரெகஷ்னா முதலிடம், எட் டாம் வகுப்பு பிரிவில் எம்.எம்.எச்.எஸ். பள்ளி தர்ஷன், சாரதா பள்ளி லோஹிதா, பிளஸ் 2 பிரிவில் செயின்ட் மேரி பள்ளி பிரைட்டன் சாண்டியோ, நிகிதா முதலிடம் பெற்றனர்.
