நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : மதுரை தி ஆனைமலைஸ் நிறுவனங்கள் மற்றும் ஜி.என்.இ.,(குளோபல் நெட்வொர்க் பார் ஈகுவாலிட்டி இந்தியா) அமைப்பு இணைந்து ஒளி என்ற பெயரில் ஆதரவற்ற 120 குழந்தைகளுக்கு தீபாவளிக்கு தேவையான உடைகள் மற்றும் இனிப்புகள், மத்தாப்பு, விருந்து வழங்கி தீபாவளி கொண்டாடினர்.
இதில் மதுரை சீனியர் வழக்கறிஞர் ஹென்ட்ரி டீபாக்னே கலந்து கொண்டார். ஆனைமலைஸ் நிர்வாக இயக்குனர் ரகுராம், மேலாண்மை இயக்குனர் சுகன்யா தலைமை வகித்தனர். சி.என்.ஜி., அமைப்பின் நிறுவனர் ராஜா, ஒளி அமைப்பாளர் விஸ்வநாத், ஆனைமலை ஏஜென்சி சி.இ.ஓ., சேதுராஜன், மேலாளர்கள் கார்த்திகேயன், சண்முகம், மயில், கருப்பசாமி ஏற்பாடு செய்து இருந்தனர்.