/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் ஸ்டாலின் விழா தி.மு.க., ஆலோசனை
/
முதல்வர் ஸ்டாலின் விழா தி.மு.க., ஆலோசனை
ADDED : நவ 24, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் தெரிவித்துள்ளதாவது:
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டிச.,7 ல் மதுரை வருகிறார். நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நவ.,28 உத்தங்குடியில் நடக்கிறது. வடக்கு மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். மண்டல பொறுப்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை வழங்குகின்றனர். கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

