ADDED : நவ 24, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதியில் மொச்சைக்காய் சீசன் துவங்கி உள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் ஊடுபயிராக 2 மாதங்களுக்கு முன் விதைப்பு செய்யப்பட்ட செடிகளில் தற்போது பலன் தருகிறது. கடந்தாண்டு கிலோ ரூ.50க்கு விற்ற மொச்சைக்காய் தற்போது ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. நல்ல விளைச்சலும் விலையும் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

