/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்
/
தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்
ADDED : நவ 24, 2025 06:51 AM
சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
இங்குள்ள அரசு பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் படித்து வருகின்றனர். மாலையில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததாலும் தாமதமாக வருவதாலும் சிரமம் அடைகின்றனர். மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் 5:30 மணிக்கு வரும் எழுவம்பட்டி, 6:00 மணிக்கு வரும் உடன்காட்டுப்பட்டி பஸ்களில் வீட்டிற்கு திரும்பும் நிலை உள்ளது.
பல சமயங்களில் சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. மேலும் பல 'ட்ரிப்'களும் 'கட்' ஆகின்றன. இதனால் பல மாணவர்கள் டூ வீலர்களில் 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர். நடந்தும் செல்கின்றனர். இரவு 7:00 மணிக்கு வீட்டிற்குச் செல்லும் நிலை உள்ளது. மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் நனைந்து கொண்டே வீடுகளுக்கு செல்லும் அவல நிலையும் உள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாகவும், கூடுதலாகவும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

