தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/காங்., பலத்தில் தான் தி.மு.க., வென்றது அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

காங்., பலத்தில் தான் தி.மு.க., வென்றது அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

காங்., பலத்தில் தான் தி.மு.க., வென்றது அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி


ADDED : அக் 28, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: ‘‘சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பலத்தில் தான் தி.மு.க. வெற்றி பெற்றது’’ என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலுாரில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகங்களை திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ,நாவினிப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:

2014 லோக்சபா தேர்தலில் தனித்து நின்ற தி.மு.க., மண்ணை கவ்வியது. 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரசோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கவில்லை என்றால் 57 இடங்களை பெற்றிருக்காது. காங்கிரஸ் பலத்தில் தான் தி.மு.க. வெற்றி பெற்றது. அவர்கள் உழைப்பில் வெற்றி பெற்றோம் என வாயை திறக்க கூடாது என்பதற்காகத்தான் த.வெ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்கள் தி.மு.க.,வினர். இதை காங்கிரஸ் அமைச்சராக பகிரங்கமாக தெரிவிக்கிறேன்.

மக்கள் ஓட்டுக்குத்தான் மதிப்பே தவிர தோற்றுப்போனவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்கிற நிலையில் காங்கிரஸ் கிடையாது.

மக்களின் பணத்தை எடுத்தவன் யாராக இருந்தாலும் சிறைச்சாலைக்குள் கம்பி எண்ணித்தான் ஆக வேண்டும். நாளை அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய பிரச்னை குறித்து பேச உள்ளேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us