ADDED : அக் 28, 2026 09:09 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தேனுார் எளிய குருசாமி மடத்தில் யாகபூஜையுடன் குருபூஜை தொடங்கியது.
சித்தரின் ஜீவ சமாதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனடியார்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். திருவேடகம் ஏடகநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
