/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தி.மு.க., வகுப்புவாத அரசியல்
/
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தி.மு.க., வகுப்புவாத அரசியல்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தி.மு.க., வகுப்புவாத அரசியல்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தி.மு.க., வகுப்புவாத அரசியல்
ADDED : அக் 29, 2025 09:39 AM
மதுரை: தி.மு.க., வினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து வகுப்புவாத அரசியல் செய்கின்றனர், என, மதுரையில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.
அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் நோக்கம் சிறுபான்மையினரை நீக்குவது என முதல்வர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்; புவியியல் புயல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளாமல் அரசியல் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறார். தங்களை ஓட்டுவங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தது சிறுபான்மை மக்களுக்கு புரிந்து விட்டதால், தி.மு.க., விற்கு தோல்வி உறுதியாகி விட்டது. தி.மு.க.,விற்கு விஜய், சீமான், அ.தி.மு.க., பா.ஜ.,வினரை பார்த்து தங்களின் சிறுபான்மை ஓட்டுக்கள் பிரிந்து விடும் என்ற பயம் உள்ளது.
தேர்தலில் தி.மு.க., தங்களின் சிறுபான்மை ஓட்டுகளை தக்க வைக்கும் நோக்கில் வகுப்புவாத அரசியல் செய்கிறது. கன்னியாகுமரியில் 50 சதவீதம் சிறுபான்மையினர் உள்ளனர்; அவர்களை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட முடியுமா.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மாநில அரசு அதிகாரிகள் செய்யப் போகிறார்கள்; தமிழக அரசு தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை நம்ப வேண்டும். கம்யூனிஸ்டுகள் புத்திசாலியாக இருந்தார்கள்; தி.மு.க., வுடன் சேர்ந்து அதுவும் போய் விட்டது என்றார்.

