/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை முதலில் நடத்துங்கள் அரசு டாக்டர்கள் கோரிக்கை
/
பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை முதலில் நடத்துங்கள் அரசு டாக்டர்கள் கோரிக்கை
பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை முதலில் நடத்துங்கள் அரசு டாக்டர்கள் கோரிக்கை
பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை முதலில் நடத்துங்கள் அரசு டாக்டர்கள் கோரிக்கை
ADDED : ஆக 07, 2025 05:29 AM
மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்திய பின்பே, இணைப் பேராசிரியர்கள் பணியிடத்திற்கான பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என அரசு டாக்டர்கள் கூறுகின்றனர்.
சுகாதாரத்துறைக்கு அரசு டாக்டர்கள் விடுத்துள்ள கோரிக்கை:
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2024 ஏப்ரலுக்கு நடக்க வேண்டிய பதவி உயர்வு கவுன்சிலிங்கை 2025 ஜூனில் தான் நடத்தியுள்ளனர். இதனால் இரண்டாண்டுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் பின்தங்கியுள்ளது. இப்போது பதவி உயர்வு கவுன்சிலிங்கை நடத்தினால் இடமாறுதலுக்காக காத்திருக்கும் சீனியர் டாக்டர்கள் பாதிக்கப்படுவர். ஜூனியர் டாக்டர்களுக்கு பதவி உயர்வுடன் இடமாறுதல் கிடைக்கும்.
2025 ஏப்ரலுக்கான கவுன்சிலிங்கிற்கான பேனல் இப்போது தான் தயாராகிறது. இந்நிலையில் பேராசிரியர்கள் பதவி உயர்வுக்காக, 500 இணைப் பேராசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே பதவி உயர்வு பெற்று தற்போதுள்ள இடங்களில் பணியாற்றும் பேராசிரியர், துணைப் பேராசிரியர்களை ஓராண்டு வரை அதே இடத்தில் இருக்க வேண்டும் என இதுவரை நிர்ப்பந்தப்படுத்தியதில்லை. ஆனால் 2007ம் ஆண்டில் வெளியான அரசாணையை காண்பித்து ஓராண்டுக்குள் மீண்டும் இடமாறுதல் வழங்கப்படாது என்கிறது சுகாதாரத்துறை.
17 ஆண்டுகளாக செயல்படுத்தாத ஒரு அரசாணையை மீண்டும் செயல்படுத்த நினைப்பது உள்நோக்கம் இருப்பதை காட்டுகிறது.
இதன் மூலம் அந்தந்த கல்லுாரிகளில் உள்ள சில டீன்கள், தங்களுக்கு பிடிக்காத டாக்டர்களுக்கான இடமாறுதல் விருப்பத்தை தலைமையகத்திற்கு அனுப்பாமல் செய்வதற்கு வாய்ப்புள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் சீனியர் டாக்டர்களுக்கு எதிராக செயல்படுவதோடு, டாக்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் சுகாதாரத்துறை முயற்சிக்கிறது.
அரசுப் பணியில் சீனியாரிட்டிக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓராண்டு, அதற்கு பின்பாக பதவி உயர்வு பெற்ற சீனியர் டாக்டர்கள் இடமாறுதலுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு முதலில் இடமாறுதல் வழங்கினால் தான் அடுத்து வரும் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது சரியாக இருக்கும் என்றனர்.