ADDED : ஜன 31, 2025 12:22 AM
வாடிப்பட்டி; வாடிப்பட்டி, அலங்காநல்லுார் ஒன்றிய அலுவலகங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஜல்ஜீவன் திட்ட மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆலோசனைப்படி குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது.
நிர்வாக பொறியாளர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். கிராமங்களுக்கு வழங்கும் குடிநீர் துாய்மையானதாக, சுகாதாரமானதாக கிடைப்பதற்கு தேவையான வழிமுறைகள் குறித்து விளக்கினர். மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்தல், குடிநீரில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற பிளீச்சிங் பவுடர், குளோரின் உட்பட அரசு அனுமதித்துள்ள விதிமுறைப்படி கலந்து வினியோகிப்பது குறித்து பயிற்சி அளித்து, உபகரணங்களும் வழங்கினர்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள், ஆப்பரேட்டர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள, பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.

