/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் கிடைத்தது குடிநீர்
/
தினமலர் செய்தியால் கிடைத்தது குடிநீர்
ADDED : அக் 13, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் ஊராட்சி கல்புளிச்சான்பட்டி தெற்கு தெரு உள்ளிட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஜல் ஜீவன் குழாயில் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். குடிநீர் குழாயும் பழுதாகி இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியானது. இதை அடுத்து ஊராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை பழுது நீக்கியதுடன், தெருக்களுக்கு செல்லும் ஜல்ஜீவன் திட்ட குழாய்களில் மேடான பகுதிகளுக்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்ததால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.