ADDED : செப் 13, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேசிய மருந்துகள் கண்காணிப்பு விழிப் புணர்வு வாரத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருந்தியல் கழகத்திலுள்ள மருந்துகள் கண்காணிப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு விழா அரசு மருத்துவ மனையில் நடந்தது.
மருந்தியல் துறைத்தலைவர் ஹேமாவதி, பேராசிரியர் ராதிகா ஏற் பாடுகளை செய்தனர். டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ., சர வணன், டாக்டர்கள் சர்மிளா, வசீம், துணை பேராசிரியர்கள் விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.
டாக்டரின் பரிந் துரையின்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டீஸ் வழங்கினர்.