ADDED : ஆக 13, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்; டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் வேங்கடாசலபதி மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செயலாளர் கீதா தலைமையில் நடந்தது.
தலைமையாசிரியர் லிங்கம் முன்னிலை வகித்தார். பேரையூர் ஏ.எஸ்.பி., அஸ்வினி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இன்ஸ்பெக்டர் குருநாதன், எஸ்.ஐ., கவிதா, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், சாரண சாரணியர் ஒருங்கிணைப்பாளர் தாழைக்கனி, இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் தங்கமுடி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

