/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மடப்புரம் காவலாளி மரண வழக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார் டி.எஸ்.பி.,
/
மடப்புரம் காவலாளி மரண வழக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார் டி.எஸ்.பி.,
மடப்புரம் காவலாளி மரண வழக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார் டி.எஸ்.பி.,
மடப்புரம் காவலாளி மரண வழக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார் டி.எஸ்.பி.,
ADDED : பிப் 28, 2026 05:29 AM
மதுரை: கோவில் காவலாளி கொலை வழக்கில், டி.எஸ்.பி.,க்கு எதிராக பிறப்பித்த பிடிவாரன்ட் உத்தரவை, அவர் ஆஜரானதால், மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவை திரும்பப் பெற்றது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவிலுக்கு வந்த பேராசிரியர் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில், கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை, 2025 ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர்.
தனிப்படை போலீசார் தாக்கியதில், அவர் இறந்தார். வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. கண்ணன் உள்ளிட்ட ஆறு போலீசார் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் பிப்., 25ல் ஆஜராக, மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிப்., 11ல் உத்தரவிட்டார்.
அன்று, ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆஜராகினர். டி.எஸ்.பி., ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, நேற்று விசாரித்தார். டி.எஸ்.பி., ஆஜராகி, பிடிவாரன்ட் உத்தரவை திரும்ப பெறக்கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை அனுமதித்த நீதிபதி, மார்ச் 5ல் டி.எஸ்.பி., மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

