/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கல் விலை உயர்வால் சூளையில் வேலை விறுவிறு! தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் உற்சாகம்

ADDED : ஜூலை 06, 2024 06:18 AM

பேரையூர் : மதுரை மாவட்டத்தில் செங்கல் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் வேலை செய்து வருகின்றனர்.
பேரையூர் பகுதிகளில் 500க்கு மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. சேம்பர் செங்கலுக்கு இணையான தரத்துடன் காளவாசல்களில் செங்கல் தயாரிக்கப்படுவதால் உள்ளூர் தேவை போக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களுக்கு அதிகமாக அனுப்பப்படுகின்றன.
கடந்த மாதம் ரூ.5 ககு விற்ற செங்கல் தற்போது ரூ.6 க்கு விற்கப்படுவதால் செங்கல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வருகின்றனர். பல செங்கல் சூளைகளில் விலை குறைவால் வேலை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது விலை ஏற்றத்தால் வேலையை துவக்கியுள்ளனர்.
செங்கல் சூளை உரிமையாளர் முத்துராஜ்: இதுவரையில் செங்கல் விலை நிரந்தரமாக இருந்தது இல்லை. மிகவும் குறைவான விலைக்கு விற்றுள்ளோம். தற்போது ஓரளவு லாபம் கிடைக்கிறது. தொழிலாளர்களும் மகிழ்ச்சியுடன் வேலை செய்கின்றனர். வேலை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. ஆனால் செங்கல் உற்பத்தி செய்ய தேவையான மண் கிடைக்கவில்லை. அரசு மண் கிடைக்க உதவி வேண்டும்.
தொழிலாளர் செல்லக்கிளி: சிறுவயதில் இருந்து இந்த வேலைதான். வேறு வேலை தெரியாது. ஆயிரம் செங்கல் செய்தால் 900 ரூபாய் கூலி கிடைக்கிறது. 10 நாட்களாக தொடர்ச்சியாக வேலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. காற்று நன்றாக அடிப்பதால் செங்கல் வேகமாக காய்ந்து விடுகிறது. இதனால் உற்பத்தியும் அதிகளவில் நடக்கிறது என்றார்.