/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் பொறுப்பு கல்வியாளர்கள் கையில் உள்ளது * வி.எச்.பி., மாநாட்டில் கருத்து
/
அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் பொறுப்பு கல்வியாளர்கள் கையில் உள்ளது * வி.எச்.பி., மாநாட்டில் கருத்து
அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் பொறுப்பு கல்வியாளர்கள் கையில் உள்ளது * வி.எச்.பி., மாநாட்டில் கருத்து
அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் பொறுப்பு கல்வியாளர்கள் கையில் உள்ளது * வி.எச்.பி., மாநாட்டில் கருத்து
ADDED : செப் 21, 2024 11:03 PM

மதுரை:மதுரை பரவை அருகே, வி.ெஹச்.பி., சார்பில், உலக ஹிந்து கல்வியாளர்கள் சங்கத்தினரின் முதலாவது மாநில மாநாடு நடந்தது. சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
வி.ஹெச்.பி., சர்வதேச பொதுச் செயலர், பஜ்ரங் லால் பக்ரா பேசியதாவது:
இந்திய நாகரிகம் என்பது ஹிந்து நாகரிகம். தற்போது ஹிந்து சித்தாந்தம், மேற்கத்திய நாடுகளின் சித்தாந்தங்களால் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. கல்வியாளர்கள் நமது சித்தாந்தத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர வேண்டும்.
கடந்த, 125 ஆண்டுகளுக்கு முன், சுவாமி விவேகானந்தர், 'நான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' என்றார். இன்று மக்கள் அவ்வாறு கூற தயங்குகின்றனர். ஹிந்து சித்தாந்தங்களை காப்பதில், வி.ெஹச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., - சங்பரிவார் அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன.
திருப்பதி பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்ற செய்தியால், ஹிந்து சமூகத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஹிந்து தர்மம், தத்துவம், சித்தாந்தத்தை பாதுகாக்க, இது போன்ற செய்திகளை சாதாரணமாக கடந்து போகாமல், கல்வியாளர்கள் ஒன்று கூடி, விவாதித்து, ஊடகங்கள் மூலம் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
நமது பாரம்பரியம், கலாசாரம், நாகரிகத்தை அடுத்த தலைமுறையினர் இழந்து வருகின்றனர். அவர்களுக்கு ஹிந்து தத்துவங்கள், சித்தாந்தங்களை எடுத்து கூறி, தர்ம வழியில் செல்ல வழிகாட்டுவது கல்வியாளர்கள் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நினைவு மலரை வெளியிட்டு சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:
ஹிந்து கலாசாரத்தின் இரு கண்களாக தர்மம், ஞானம் உள்ளன. தர்மம், எல்லாருக்குமான ஒழுக்க நெறிகளை குறிப்பது. ஞானம், தனி மனித தேடல் சம்பந்தப்பட்டது. இன்று சமூக ஊடகங்களின் தாக்கத்தால், தர்மம் என்பது மூடநம்பிக்கை சார்ந்தது என முத்திரை குத்தப்படுகிறது.
நாம் தர்மத்தை காப்போமானால், எதோவொரு வழியில் அது நம்மை காக்கும். மானிடப் பிறவியால் மட்டுமே ஞானத்தை பெற முடியும். அதற்கான முக்கிய ஆதாரங்கள் உபநிடதங்கள். ஞானம் பெறுதல் மூலம், ஒருவர் அனைத்துவித சுக, துக்கங்களில் இருந்து விடுபட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்
ஐ.ஐ.டி., கான்பூர் பேராசிரியர் நச்சிகேட திவாரி, அமெரிக்கன் கல்லுாரி ஓய்வுபெற்ற பேராசிரியர் பிரணதார்த்திஹரன் பேசினர்.