/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில போட்டியில் எழுமலை மாணவர்கள்
/
மாநில போட்டியில் எழுமலை மாணவர்கள்
ADDED : டிச 06, 2025 05:52 AM
எழுமலை: கடந்த டிச.4, 5 ல் நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மதுரை மண்டல குத்துச்சண்டை போட்டியில் எழுமலை அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
17 வயது 54-57 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பாண்டி முதலிடம், 57-60 கிலோ பிரிவில் காளிதாஸ் முதலிடம், 70-75 கிலோ எடைபிரிவில் நவீன்குமார் இரண்டாமிடம், 50-52 கிலோ பிரிவில் பெருமாள் மூன்றாமிடம் பெற்றனர்.
14 வயது 34-36 கிலோ பிரிவில் பிரிதிவிராஜ் முதலிடம், 36-38 கிலோ பிரிவில் டோனித்பிரபு மூன்றாமிடம் பெற்று மாநில குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் கிறிஸ்டி செலீனாள்பாய், உதவித்தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், விக்னேஸ்வரன் உட்பட பலர் பாராட்டினர்.

