ADDED : அக் 19, 2025 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெருநகர் அரசரடி கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் அக். 23 அன்று நடக்க உள்ளது.
இதில் அரசரடி மின்கோட்ட பகுதிக்குட்பட்டோர் தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளிடம் நேரிலும், மனு மூலமும் தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.