/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முள்ளிப்பள்ளத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு
/
முள்ளிப்பள்ளத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : மே 31, 2025 05:03 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் முளைத்துள்ளன.
அப்பகுதியைச் சேர்ந்த மார்நாட்டான் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஓராண்டுக்கு முன்பு மேலக்கால் முதல் சித்தாதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. முறைப்படி நோட்டீஸ் வழங்கி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.தற்போது அகற்றப்பட்ட சில இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைவிடுகின்றன. மேலும் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.
அவற்றை முழுமையாக அகற்றினால்தான் சாக்கடை வாய்க்கால் வசதி செய்ய முடியும். தற்போது மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்