/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பு வழக்கு: அதிகாரி ஆஜராக உத்தரவு
/
ஆக்கிரமிப்பு வழக்கு: அதிகாரி ஆஜராக உத்தரவு
ADDED : ஆக 08, 2025 02:44 AM
மதுரை: மதுரை வீரமணிகண்டன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை--- மேலுார் ரோடு ஒத்தக்கடை நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அகற்ற வேண்டும். குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு கண்காணிப்பு கேமராக்களை நிறுவி கண்காணிக்க கலெக்டர், மாநில நெடுஞ்சாலைத்துறை மதுரை கோட்ட உதவி செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு,'ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆக.13 ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.

