ADDED : டிச 19, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மயில்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில்பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதற்கு சொந்தமான நந்தவனம் 1 ஏக்கர் 81 சென்ட் பரப்பில் திருப்பரங்குன்றம் ரோடு (ஏ.ஏ.ரத்தினபுரம் ரோடு) பகுதியில் உள்ளது. மதிப்பு ரூ.100 கோடி. இது போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு, அங்கீகாரமற்ற கட்டுமானத்தை அகற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை கோரி 2022ல் அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 3 மாதத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.