ADDED : டிச 26, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செயற் பொறியாளர் வெங்கடேஷ், உதவி செயற் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், காசிலிங்கம், காத்தமுத்து, உதவி பொறியாளர்கள், மின் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தேனி ரோட்டில் இருந்து ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை நடந்த ஊர்வலத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
திருமங்கலத்திலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தேவர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர். செயற்பொறியாளர் முத்தரசு தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் ராமசுப்பு, செல்வராஜ், நந்தகுமார், உதவி பொறியாளர்கள் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.