/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கட்டுமான பொருட்கள் விலையேற்றம் கட்டுப்படுத்த முதல்வரை வலியுறுத்தும் பொறியாளர்கள்

ADDED : பிப் 11, 2025 05:14 AM

மதுரை: மதுரையில் கட்டுமானபொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்என, மதுரை சிவில் இன்ஜினியர்ஸ் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இச்சங்கத் தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் சரவணன், பொருளாளர் மோகன்தாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:
மதுரையில் எங்களைச்சார்ந்து ஒரு லட்சம் பேருக்கு மேல் கட்டடத் தொழில் செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் மட்டும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் வேதனை அளிக்கிறது. இப்பொருட்களின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயரவில்லை. இருப்பினும் மணல், ஜல்லி, செங்கல், எம்.சாண்ட், கிரஷர் டஸ்ட் போன்றவை 20 முதல் 25 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திடீர் விலையேற்றத்தால் பொறியாளர்கள், ஒரு லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றன. நடுத்தர மக்களின் எண்ணம், இந்த விலை உயர்வால் கனவாகும் சூழல் உள்ளது. இந்த விலை ஏற்றத்தை தடுத்து, விலையை குறைக்க முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயிக்க குழுவும், இன்ஜினியரிங் கவுன்சிலும் அமைக்கவும் வேண்டும். மதுரை மாவட்டத்தில் மட்டும் விலையேற்றம் இருப்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை பெற அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.