/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதுகாக்கும் போலீசிற்கே பாதுகாப்பு இல்லை திருப்பரங்குன்றம் மலையில் திக்... திக்...
/
பாதுகாக்கும் போலீசிற்கே பாதுகாப்பு இல்லை திருப்பரங்குன்றம் மலையில் திக்... திக்...
பாதுகாக்கும் போலீசிற்கே பாதுகாப்பு இல்லை திருப்பரங்குன்றம் மலையில் திக்... திக்...
பாதுகாக்கும் போலீசிற்கே பாதுகாப்பு இல்லை திருப்பரங்குன்றம் மலையில் திக்... திக்...
ADDED : ஆக 06, 2025 09:08 AM
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலையிலும், உச்சியிலும் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பாம்பு, தேள் போன்றவற்றால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முக்கியத்துவம் கருதி, இந்தாண்டு மார்ச் 5ல் கோயில் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.
மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்கா மற்றும் மலை உச்சியில் உள்ள தீபத்துாணிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் இருக்க காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி, மதியம் 2:00 முதல் இரவு 9:00 மணி, இரவு 9:00 முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை என இரு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இவர்கள் ஓய்வெடுப்பதற்கான வசதி மலையில் இல்லை. வெயில், மழையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மழை பெய்தால் தர்காவிற்குள் செல்ல வேண்டியுள்ளது. மலை உச்சியில் உள்ள போலீசார் துாண் பகுதியில் ஒதுங்க வேண்டியுள்ளது. இதில் இரவு பணி போலீசார் நிலைதான் பரிதாபம். பணியில் 'அலர்ட்' ஆக உள்ளார்களா என அதிகாரிகள் 'செக்' செய்ய ரோந்து வருவது போல் பாம்புகள், தேள் போன்றவை 'வந்து செல்கின்றன'. கொஞ்சம் அசந்தாலும் 'போட்டு' தள்ளிவிடும் அபாயம் உள்ளது.
போலீசாரின் நிலையை உணர்ந்து தர்கா பகுதியிலும், மலை உச்சியிலும் தகடுகளால் வேயப்பட்ட ஓய்வறை அமைக்க சில மாதங்களுக்கு முன் முடிவெடுக்கப்பட்டது. அதை உடனடியாக அமல்படுத்தினால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்காது என்கின்றனர் போலீசார்.