UPDATED : அக் 24, 2026 12:02 AM
ADDED : அக் 23, 2026 11:58 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதி சொத்துவரி முறைகேடு வழக்கில் தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது தி.மு.க.,வினர் தடுத்தனர். தகராறு ஏற்பட்டது. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக சிலர் மீது வழக்கு பதியப்பட்டது.
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தளபதி, ‘எப்.ஐ.,ஆரில் எனது பெயர் இல்லை. அரசியல் உள்நோக்கில் கைது செய்ய வாய்ப்புள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,’’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.முருகன், ‘‘எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும். அங்கு இம்மனு விசாரணை மாற்றப்படுகிறது,’’ என உத்தரவிட்டார்.
