/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி துவக்கம்
/
மதுரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி துவக்கம்
மதுரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி துவக்கம்
மதுரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி துவக்கம்
ADDED : நவ 23, 2025 04:16 AM

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் 'சரஸ் மேளா' எனும் மதி கண்காட்சி, உணவு திருவிழா நேற்று துவங்கியது.
துணை முதல்வர் உதயநிதி இதை துவக்கி பேசியதாவது:
கடந்தாண்டு சென்னை உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடிக்கு மேல் விற்பனையானது. இந்தாண்டு மதுரையில் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி பல மாநில மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.
'ஆல் இண்டியா டூர்' போக நினைப்பவர்கள் தமுக்கம் வந்தால் போதும்.
இங்கு வாங்கும் ஒவ்வொரு பொருளும் சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கும் ஊக்கம். இந்தாண்டு ரூ.620 கோடிக்கு பொருட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆட்சியில் ஓராண்டு விற்பனை ரூ.10 கோடியை கூட தாண்டவில்லை.
சுயஉதவிக் குழு மகளிர் அடையாள அட்டை மூலம் தயாரிப்பு பொருட்கள் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கி.மீ., துாரத்திற்கு கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். மகளிரின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். இவ்வாறு பேசினார்.
சுயஉதவிக் குழுவின் 500 மகளிருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எம்.எல்.ஏ., தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
200 ஸ்டால்களில் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உணவுத்திருவிழாவில் 50 ஸ்டால்களில் மாவட்டங்களின் 'ஸ்பெஷல்'கள், சிறுதானிய உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. டிச., 3 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

