/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகர்கோவில் ரோடு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
அழகர்கோவில் ரோடு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
அழகர்கோவில் ரோடு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
அழகர்கோவில் ரோடு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 14, 2025 05:39 AM
அழகர்கோவில்: கள்ளந்திரி முதல் கள்ளழகர் கோயில் வரை உள்ள ரோட்டை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் முதற்கட்டமாக விரிவாக்கப்பட உள்ள அடித்தளத்தின் மணல் அள்ளப்பட்டு அதன்பின் கற்கள் கொண்டு சமன்படுத்தப்பட உள்ளன.
சித்திரை திருவிழாவின் ஒரு நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். இதற்காக மே 10ல் கள்ளழகர் அழகர்மலையில் இருந்து புறப்பட்டு வழியில் உள்ள திருக்கண் மண்டபங்களில் எழுந்தருள்வார்.
அந்நேரத்தில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். ரோடு அகலப்படுத்தும் பணி முடிய இன்னும் ஆறு மாதகாலம் ஆகும் என்பதால் அழகரை தரிசிக்க வருவோரிடையே நெரிசலும், போக்குவரத்து இடையூறும் ஏற்படும்.
எனவே பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.