நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : மதுரை விளாச்சேரி வெங்கடேச பெருமாள் கோயில் நிர்வாகம், பொம்மை உற்பத்தியாளர் சங்கம், வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் விளாச்சேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
மதுரை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். விளாச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுந்தர், செயலாளர் நாகராஜன், கோயில் நிர்வாகிகள் குணசேகரன், ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் ரேஷ்மா தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
போகர் அக்குபங்சர் மாற்றுமுறை மருத்துவம் மற்றும் பயிற்சி மைய நிர்வாகிகள் பரிபூர்ணம், ராஜா தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

