ADDED : டிச 19, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஏற்றுமதி செய்வதற்கான இலவச கருத்தரங்கு டிச. 21 காலை 10:30 மணிக்கு நடக்கிறது. சென்னை, துாத்துக்குடி கிருஷ்யா லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகி கார்த்திகேய பிரபு ஏற்றுமதி குறித்து விளக்குகிறார்.
முதல் தலைமுறை ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள் பயன்பெறலாம். நீ ஏற்றுமதி செய்' தளம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மதிய உணவு உண்டு. முன்பதிவு செய்தவர்களுக்கே அனுமதி. அலைபேசி: 98943 99054.