நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை வலையங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் ஆலோசனைப்படி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன் தலைமையில் அரசு மருத்துவமனை குழுவினர் நுாற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண் பரிசோதனை, சிகிச்சை அளித்தனர். 17 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். வட்டார தொழுநோய் மேற்பார்வையாளர் முத்துமாயன், வட்டார மேற்பார்வையாளர் அழகுமலை ஏற்பாடு செய்தனர். உதவியாளர் சரவணன் ஒருங்கிணைத்தார்.