/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு
/
மதுரை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு
மதுரை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு
மதுரை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு
ADDED : அக் 09, 2025 01:31 AM
மதுரை :மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த அம்மச்சியாபுரத்தில், மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கிடந்ததால், அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
அம்மச்சியாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிக மோசமாக சேதம் அடைந்தது. இதனால் இதன் அருகே, மத்திய அரசின், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், 16.75 லட்சம் ரூபாயில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பல மாதங்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.
நான்கு நாட்களுக்கு முன் புதிய தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது. வழக்கமான சுத்தம் செய்யும் பணிகளுக்காக நேற்று முன்தினம், தொட்டியின் மேலே சென்ற, 'வாட்டர் பம்ப் ஆப்பரேட்டர்' மருதுபாண்டி, தண்ணீரில் மலம் இருப்பதை உறுதி செய்தார். இத்தகவல் ஊருக்குள் பரவியதால், ஊராட்சி அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.
தண்ணீரை வெளியேற்றிவிட்டு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. சிறுவர்கள், விளையாட்டாக செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.----