/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதாள சாக்கடை இணைப்பு தருவதாக கூறி வசூல் மதுரையில் போலி மாநகராட்சி ஊழியர் கைது
/
பாதாள சாக்கடை இணைப்பு தருவதாக கூறி வசூல் மதுரையில் போலி மாநகராட்சி ஊழியர் கைது
பாதாள சாக்கடை இணைப்பு தருவதாக கூறி வசூல் மதுரையில் போலி மாநகராட்சி ஊழியர் கைது
பாதாள சாக்கடை இணைப்பு தருவதாக கூறி வசூல் மதுரையில் போலி மாநகராட்சி ஊழியர் கைது
ADDED : நவ 02, 2025 03:46 AM
மதுரை: மதுரையில் விரிவாக்க பகுதி வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு தருவதாக கூறி வீடுதோறும் வசூலில் ஈடுபட்ட மாநகராட்சி போலி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் சில இடங்களில் இன்னும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படவில்லை. அதுபோன்ற பகுதிகளுக்கு சென்று இணைப்பு தர ஏற்பாடு செய்து தருவதாக சில மாதங்களாக தொடர் மோசடியில் சிலர் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் ஒருவரை மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பாலை ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதி வீடுகளில் வண்டியூரைச் சேர்ந்த வீரபத்திரன் 65, என்பவர் வந்து தன்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். 'இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. அதற்கு பைப் அமைக்க மாநகராட்சிக்கு ரூ.2500 கட்டணம் செலுத்த வேண்டும்' என வீடுதோறும் வசூலில் ஈடுபட்டார். சில வீடுகளில் ரூ.3 ஆயிரம் கூட வாங்கினார். அதற்கு ரசீது கேட்டபோது ஓரிரு நாளில் தருவதாக கூறி 'எஸ்கேப்' ஆனார்.
சில நாட்களுக்கு பிறகு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சந்தித்து பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காதது குறித்து பேசியபோதுதான் இந்த மோசடி தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், மோசடி நபரை தேடினர். ஆள் சிக்கவில்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் வீரபத்திரன் திருப்பாலை பகுதியில் வழக்கம்போல் வசூலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏமாந்தவர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகளின் முயற்சியால் வீரபத்திரனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றவில்லை எனத்தெரிந்தது. வசூல் செய்த பணத்தை ஆடம்பரமாக செலவழித்து வந்துள்ளார். அவரை திருப்பாலை போலீசார் கைது செய்தனர்.

