UPDATED : நவ 05, 2026 10:05 PM
ADDED : நவ 05, 2026 09:33 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: இலங்கையிலிருந்து நேற்று (நவ.,4) மதுரைக்கு வந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை, குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் புதுமண்டபம் காசீன்முகமது 41, பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் பாஸ்போர்ட்டில் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட விபரங்களை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது குடியேற்றப்பிரிவு அதிகாரி அருண்குமார், அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காசீன்முகமதுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
