/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராமநாதபுரத்தில் வைக்கோல் விலை வீழ்ச்சியால்.. விவசாயிகள் பாதிப்பு; மூன்று மடங்கு குறைவால் வயலில் விடுகின்றனர்

UPDATED : பிப் 04, 2024 07:45 AM
ADDED : பிப் 04, 2024 05:41 AM

ஆர்.எஸ்.மங்கலம் : வைக்கோல் விலை மூன்று மடங்கு வீழ்ச்சியடைந்து கட்டு ரூ.20க்கு வியாபாரிகள் வாங்குவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் தாலுகாக்கள் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகின்றன. இங்கு 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெல் மகசூல் நிலையை அடைந்ததால் கடந்த ஒரு மாதமாக நெல் அறுவடை பணிகள் நடக்கின்றன.
ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதிகளில் நெல் அறுவடை துவங்கிய நேரத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் இருந்த வைக்கோல் கட்டுக்கு( 15 கிலோ) ரூ.80 வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
தற்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ.20க்கு வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஒரே மாதத்தில் மாதத்தில் ரூ.80ல் இருந்து ரூ.20 ஆக மூன்று மடங்கு விலை குறைந்துள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளிடம் உள்ளூர் இடைத்தரகர்கள் கமிஷன் பெற்று வருவதால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் பாதிப்படைவதாக குற்றம்சாட்டுகின்றனர். வைகோலுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---