/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்வளத்துறைக்கு நிதி வருவது எப்போது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
/
நீர்வளத்துறைக்கு நிதி வருவது எப்போது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
நீர்வளத்துறைக்கு நிதி வருவது எப்போது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
நீர்வளத்துறைக்கு நிதி வருவது எப்போது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
ADDED : ஜூலை 09, 2025 06:59 AM
மேலுார் : 'பதிமூன்று ஆண்டுகளாக மனு கொடுத்தும் சரிசெய்யாத நீர்வளத்துறைக்கு நிதி வருவதுதான் எப்போதோ' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் புதுசுக்காம்பட்டி, கேசம்பட்டி, கொட்டகுடி, சுண்ணாம்பூர், இலுப்பக்குடி பகுதியில் உள்ள புழுங்குடி, சிறுமேளம் கண்மாய்கள், பெரிய அருவி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நுாறு நாள் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு கால்வாயை சீரமைக்க வேண்டும். மேலவளவு வேப்பனேரி கண்மாய் மடை உடைந்து தண்ணீர் வீணாகிறது. நீர்வளத் துறையில் எந்த வேலை சொன்னாலும் நிதி இல்லை; வரும் நிதியாண்டில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்கின்றனர். ஆனால் 13 வருடங்களாக மனு கொடுத்தும் சரி செய்யவில்லை. அதனால் நீர்வளத் துறைக்கு எப்போதுதான் நிதி வருமோ என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
கொட்டாம்பட்டி பி.டி.ஓ., உள்ளிட்ட குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களில் குடிமராமத்து பார்க்கும்போது விவசாயிகளுக்கு தெரிவிக்காமல் பெயரளவில் வேலை செய்து முறைகேடு செய்கின்றனர். தும்பைப் பட்டியில் சிதிலமடைந்த 12 வது மடையை சீரமைக்க வேண்டும்.
பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமுன் சிறுமேளம் கண்மாயில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி மடைகளை சரி செய்ய வேண்டும். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க கோரி ஜூலை 31 ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
விவசாயிகள் கிருஷ்ணன், மணி, கதிரேசன், பன்னீர், பாண்டி, அருண், சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர்.