ADDED : ஆக 11, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் மகாமுனி, செயலாளர் சந்தனம், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம் பேசினர்.
சோழவந்தானில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும், மயானத்திற்கு செல்லும் பாதையை சுத்தப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் பெரியசாமி, காசி, மணிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.