ADDED : அக் 26, 2024 05:23 AM
மதுரை: டி.கல்லுப்பட்டி, சேடபட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் கண்டுணர் பயணமாக வெளிமாநிலங்களுக்கு விவசாய தொழில்நுட்ப பயிற்சி பெற அனுப்பப்பட்டனர்.
வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி வழியனுப்பினார். டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, மேலுாரைச் சேர்ந்த 20 விவசாயிகள் 5 நாட்கள் பயணமாக ஐதராபாத் இந்திய சிறுதானிய ஆராய்சி நிறுவனம், தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்திற்கு சென்றனர்.
சேடபட்டி, கொட்டாம்பட்டியைச் சேர்ந்த 20 விவசாயிகள் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி பெற பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், காந்தி கிசான் விக்யான் கேந்திரா அழைத்துச் செல்லப்பட்டனர்.
பேராசிரியர் சங்கர் தக்காளி, மிளகாய், கத்தரி, வெங்காயம், காய்கறி பயிர்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களை விளக்கினார். பேராசிரியர் வெங்கட்ராவணன் வேளாண்மை துறை புதிய தொழில்நுட்பங்களை விளக்கினார். வட்டார தொழில்நுட்ப அலுவலர்கள் ஹேமலதா, மாரிமுத்து, ஜெகன்பாண்டி, கணேசராஜா முன்னேற்பாடுகளை செய்தனர்.