/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர் கலப்பால் கலங்கும் விவசாயிகள்
/
கழிவுநீர் கலப்பால் கலங்கும் விவசாயிகள்
ADDED : நவ 01, 2024 05:09 AM
மேலுார்: திருவாதவூர் பகுதியில் பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
மேலுார் ஒரு போக பாசன பகுதியில் சுண்ணாம்பூர் பிரிவில் 4ஏ மடையில் இருந்து இலுப்பக்குடி கால்வாய் டி. மாணிக்கம்பட்டி வரை 4 கி.மீ., துாரம் செல்கிறது. இக் கால்வாயால் மரித்துக்கட்டி, துாக்கனேந்தல் உள்ளிட்ட 15 கண்மாய்கள் நிரம்பி அதன் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறும். ஆனால் இக் கால்வாயில் டி. புதுப்பட்டியில் கழிவுநீர் கலக்கிறது.
விவசாயிகள் கூறியதாவது: டி.புதுப்பட்டியில் ஒரு பகுதி கழிவு நீர் கால்வாயில் கலப்பதால் தோலில் அரிப்பு ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடு, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கழிவு நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலை உள்ளது. எனவே, கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால் கலெக்டர் கழிவு நீரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், கழிவுநீர் பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பது குறித்து ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு ஏற்கனவே தபால் அனுப்பி உள்ளேன். மீண்டும் தபால் எழுத உள்ளேன் என்றார்.