/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலுாரில் காதல் மறுமணம் செய்த அக்கா கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி தந்தை கைது: 10 பேருக்கு போலீசார் வலை
/
மேலுாரில் காதல் மறுமணம் செய்த அக்கா கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி தந்தை கைது: 10 பேருக்கு போலீசார் வலை
மேலுாரில் காதல் மறுமணம் செய்த அக்கா கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி தந்தை கைது: 10 பேருக்கு போலீசார் வலை
மேலுாரில் காதல் மறுமணம் செய்த அக்கா கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி தந்தை கைது: 10 பேருக்கு போலீசார் வலை
ADDED : ஆக 17, 2025 10:48 PM

மேலுார் : மதுரை மாவட்டம் மேலுாரில் கணவர் இறந்தபின் காதலித்து மறுமணம் செய்து கொண்ட அக்கா கணவரை தம்பியே தன் நண்பர்கள் மூலம் கார் ஏற்றிக்கொன்றார். இதில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலுார் தும்பைபட்டியைச் சேர்ந்தவர் ராகவி 24. பொட்டப்பட்டியைச் சேர்ந்த உறவினர் செல்வத்தை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாண்டுகளுக்கு முன் வாகன விபத்தில் செல்வம் இறந்தார். கணவர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்த ராகவிக்கு பக்கத்து வீட்டில் இருந்த சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களும் கூட.
காதல் திருமணம் கடந்த ஜூலையில் ராகவி காணாமல் போனதால் அவரது பெற்றோர் மேலுார் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில் பக்கத்து வீட்டு சதீஷ்குமாருடன் 21, திருமணம் செய்து திருச்சியில் வசிப்பது தெரிந்தது. ராகவியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் இருவரையும் சேர்ந்து வாழ வைப்பதாக கூறி அழைத்து சென்றனர்.
தும்பைபட்டிக்கு சென்றதும் ராகவியை சில நாட்கள் தங்கள் வீட்டில் வைத்திருப்பதாக கூறி சதீஷ்குமாரை அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு முன் சதீஷ்குமாரை அலைபேசியில் தொடர்பு கொண்ட ராகவி, தன்னை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறினார். மனைவியை மீட்டு தரும்படி ஆக., 14 ல் மேலுார் மகளிர் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார்.
ஆக., 16 ல் இருதரப்பினரையும் போலீசார் அழைத்துப்பேசினர். அதில் ராகவி கணவருடன் திருச்சி செல்வதாக கூறியதால் போலீசார் அனுப்பி வைத்தனர். இருவரும் டூவீலரில் செல்லும் தகவல் சிங்கப்பூரில் உள்ள ராகவியின் தம்பி ராகுலுக்கு தெரிய வந்தது. அவர் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நண்பர்கள் அய்யனார், அருண்பாண்டி மற்றும் உறவினர்களிடம் இருவரையும் தாக்குமாறு கூறியுள்ளார்.
கார் ஏற்றிக் கொலை
மேலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இருவரும் டூவீலரில் புறப்பட்ட போது அவர்கள் காரில் பின் தொடர்ந்தனர். இரவு 11:30 மணிக்கு அய்யாபட்டி விலக்கருகே டூவீலர் மீது காரை கொண்டு மோதினர். சதீஷ்குமார், ராகவி தடுமாறி விழுந்தனர். காரில் வந்த நால்வரும் சேர்ந்து தாக்கியதில் சதீஷ்குமார் இறந்தார்.
காயமடைந்த ராகவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம்பட்டி போலீசில் அவர் கொடுத்த புகாரில் கொலைக்கு காரணமான தம்பி ராகுல், உடந்தையாக இருந்த உறவினர், நண்பர்கள் அய்யனார், அருண்பாண்டி, சரிதா, அழகர், ஆறுமுகம் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ். ஐ., பாலகிருஷ்ணன், போலீசார் தெய்வேந்திரன் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
பெண்ணின் தந்தை கைது
இந்நிலையில் ராகவியின் தந்தை தும்பைபட்டியைச் சேர்ந்த அழகரை 57, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.