நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு மொழிச் சிறுபான்மை சவுராஷ்டிரா கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டம் சவுராஷ்டிரா கல்லுாரியில் நடந்தது.
கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தராமன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் குமரேஷ், இணைச்செயலாளர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முரளிதரன், தேசிய சிறந்த நெசவாளர்கள் விருதுபெற்ற பிரேமா, அலமேலு பாராட்டப்பட்டனர்.
சவுராஷ்டிரா கல்லுாரி செயலாளர் குமரேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன், கூட்டமைப்பு உறுப்பினர் பரசுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஸ்வநாதன் நன்றி கூறினர்.