/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் பேரையூருக்கு உரம் வந்தது
/
தினமலர் செய்தியால் பேரையூருக்கு உரம் வந்தது
ADDED : நவ 16, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதியில் ஒரு மாத காலமாக உரங்கள் தட்டுப்பாடு நிலவியது.
பேரையூர் தாலுகாவில் சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி யூனியன்களில் நெல் நடவு பணி நடந்து வருகிறது. நெல் பயிர்களுக்கு மேலுரமும் நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு அடி உரமும் இட வேண்டும். மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கும் உரம் தேவைப்படுகிறது.
இந்நிலையில் தனியார் கடைகளில் யூரியா மற்றும் டி.ஏ.பி., உரம் தட்டுப்பாடு இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக பேரையூர் பகுதி உரக்கடைகளுக்கு உரங்கள் போதுமான அளவு இறக்குமதி செய்யப்பட்டது.

