/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளாங்குடி, அழகாபுரி கோயிலில் திருவிழா
/
விளாங்குடி, அழகாபுரி கோயிலில் திருவிழா
ADDED : ஏப் 14, 2025 05:37 AM

மதுரை: மதுரை விளாங்குடி காமாட்சி நகர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா நடந்தது.
இக்கோயிலில் ஏப்.4 ல் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி, அன்று மாலை காப்பு கட்டும் வைபவம் நடந்தது. ஏப்.5 ல் காலையில் தெம்மாங்கு கும்மிப்பாடல் நிகழ்ச்சியும், ஏப்.10 ல் திருவிளக்கு பூஜை, தெய்வ வழிபாடும் நடந்தது. ஏப்.11 ல் காலையில் வைகை நதியில் பால்குடம் எடுத்து வந்தனர். பூக்குழி பூமிபூஜையும், காமாட்சி அம்மன் கோயில் சென்று பட்டாடை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றுதலும் நடந்தது.
ஏப்.12 ல் பொங்கல் வைத்ததுடன், அன்னதானமும் நடந்தது. இரவில் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா, சக்திகரகம் ஊர்விளையாடுதல், மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முளைப்பாரி, வைகை நதியில் கரைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ஜெயவீரன், காமாட்சி நகர், ராமமூர்த்தி நகர், பாலமுருகன் நகர், காந்திநகர் பொதுமக்கள் செய்தனர்.
அலங்காநல்லுார்
அழகாபுரியில் வரசித்தி விநாயகர், வரதராஜ பெருமாள், செல்லாயி அம்மன், நாணல்குளம் கருப்பசாமி, அய்யனார் சுவாமிகோயில் பங்குனிப் பெருந்திருவிழா நடந்தது.
இக்கோயிலில் ஏப்.11ல் மஞ்சமலை சுவாமிக்கு கனிமாற்றுதல் நிகழ்ச்சி, சுவாமிகளுக்கு பொங்கல் வைத்து, நைவேத்தியம் பூஜை, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் நடந்தது. ஏப்.12 ல் செல்லாயி அம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் வழங்குதல், கிடா வெட்டும், மதியம் ஒயிலாட்டம், இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. நேற்று முளைப்பாரியை கரைத்தல், அய்யனார், கருப்பண சுவாமி, கன்னிமார்களை குதிரை, காளை வாகனங்களுடன் சோலை கொண்டு சேர்த்தல் நிகழ்வு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.