ADDED : நவ 06, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் 2007 ல் மின்திருட்டு நடந்தது.
மின்வாரியத்திற்கு ரூ.86 லட்சத்து 26 ஆயிரத்து 964 வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அந்நிறுவனத்தை சேர்ந்த தில்லைராஜ், தங்கராஜ், கனகராஜிற்கு எதிராக மின்வாரியம் தரப்பில் மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார். அரசு
வழக்கறிஞர் பழனிசாமி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மின் திருட்டு மூலம் மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட் டுள்ளது.
மூன்று பேருக்கும் சேர்த்து ரூ.28 லட்சத்து 94 ஆயிரத்து 978 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

