UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 05:55 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார், சிறப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தெப்பக்குளம் மீனாட்சி பள்ளியில் பட்டாசு வெடிகளை பாதுகாப்ப வெடிப்பது, முதலுதவி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுரை தெற்கு தாசில்தார் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-சோழவந்தான்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சோழவந்தான் நிலைய அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
