மின்கட்டமைப்பை உருவாக்கிய பின் தனியார் மின் கொள்முதலுக்கு அனுமதி
மின்கட்டமைப்பை உருவாக்கிய பின் தனியார் மின் கொள்முதலுக்கு அனுமதி
UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 05:54 PM
மதுரை: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு தனியார் மின் கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்த பின் கொள்முதல் அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
110 கிலோவாட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் எச்.டி., ரக பெருந்தொழில் நிறுவனங்கள், தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மின்கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறு, சிறு, நடுத்தர(எம்.எஸ்.எம்.இ.,) தொழில் நிறுவனங்களுக்கும் மின்தேவை அதிகமாக உள்ளது. லட்சக்கணக்கான எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் மின்தேவைக்காக தமிழக அரசு, தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த தொகைக்கு தனியாரிடம் இருந்து நேரடியாக எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மின்கொள்முதல் செய்ய முடியும்.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: ஒவ்வொரு இடத்திலும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் மின்தேவை 0.5 மெகாவாட் முதல் கிலோவாட் வரை மாறுபடுகிறது. டிரான்ஸ்பார்மர்களின் மின் கடத்துதிறன் (டிரான்ஸ்மிஷன் லைன்) அளவைப் பார்த்து தான் முடிவுசெய்ய முடியும். சென்ட்ரல் காரிடாரில் நமக்கான கொள்திறன் 14 ஆயிரத்து 600 மெகாவாட் உள்ளது. திடீரென அனுமதி கொடுத்தால் எந்த டிரான்ஸ்மிஷன் லைனில் ‘ஓவர்லோடு’ வருகிறது என்பதை சொல்லமுடியாது. அதற்கான கட்டமைப்பு உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
