தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பட்டாசு வெடித்ததில் தகராறு மதுரையில் கும்பல் அட்டூழியம்

பட்டாசு வெடித்ததில் தகராறு மதுரையில் கும்பல் அட்டூழியம்

பட்டாசு வெடித்ததில் தகராறு மதுரையில் கும்பல் அட்டூழியம்


UPDATED : நவ 10, 2026 10:06 AM

ADDED : நவ 10, 2026 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:06 AM ADDED : நவ 10, 2026 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தகராறில் இருவேறு சம்பவங்களில் தலா 4 பேர் கொண்ட இரு கும்பல்கள் குடியிருப்போரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியது.

கீரைத்துறை மேலதோப்பு காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த கார்த்தி 35, தீபாவளியன்று தனது குழந்தைகளுடன் வீட்டருகே பட்டாசு வெடித்தார். அதே பகுதி கோபி, பொன்ராஜ், தனுஷ் என்ற தனுக்கொடி, மணிமுருகன் ஆகியோர், மது போதையில் கார்த்தி, அவரது மனைவி முனீஸ்வரி, 16 வயது மகள் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், நால்வரும் அவர்களை அரிவாளால் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்து தப்பினர். இதில் முனீஸ்வரி, அவரது மகளுக்கு காயம் ஏற்பட்டது. கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

* மஹபூப்பாளையம் அன்சாரி நகர் முதல் தெருவில் உள்ள ஷேக் பஷில் என்பவர் வீட்டின் முன்பு அதே பகுதி இபு, ஆஸிப் உள்ளிட்ட 4 பேர் பட்டாசு வெடித்தனர். அப்போது பஷில் வீட்டில் நிறுத்தப்பட்ட காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பஷிலின் சகோதரர், பாட்டி ஆகியோரை தாக்கிய அக்கும்பல் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றது. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us